தொலைவின் வரிகள் -1 படிக்க இங்கே செல்லவும்
மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.
போரும் அமைதியும் (War and Peace)
கடலென ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளும் சரி
கண நேர மௌனமும் சரி
நம்மை நெருக்கியே வைத்திருக்கிறது
முன் எப்போதும் இல்லாதபடி.
கொலுசுச்சத்தம்
தெருவில் மழை நீர் சலசலத்து கொண்டிருந்தது
உனது கொலுசுச் சத்தம் நினைவுக்கு வந்தது
பின்னால் இருந்து என் கண்கள் மூடினாய்
கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது நம் இதயங்கள்.
ஒரு விநாடி...ஒரு கேள்வி (One second...A question)
நாம் தொலைத்த விநாடிகள்
நாம் தொலைந்த விநாடிகள்
எது நமக்கு நெருக்கமாக இருக்கின்றன?
பிரபஞ்ச வெளிச்சம்
திருமலைக்கோவில் விளக்கு; குற்றால சாரல் இடி மின்னல் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் ஒரே இருட்டு.
மாலை நேரம் நீ தெருவில் நடந்து சென்றாய் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் வியாபித்திருந்தது
பிரபஞ்ச வெளிச்சமாய் உன் முகம்.
No comments:
Post a Comment