பக்கத்து வீட்டு வள்ளி அக்கா எல்லோரிடமும் அன்போடு நன்றாக சிரித்து பேசுவாள். ராஜு மாமா, வள்ளி அக்காவின் கணவர், காலையில் ஏழு மணிக்கு ரயில் பிடித்தால், வேலை முடிந்து இரவு எட்டரை மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். குழந்தைகள் குமாரும், ராணியும் பள்ளி முடிந்து வீடு வர ஆறு மணி ஆகிவிடும். வந்ததும் குமாரும், ராணியும் நேரே டி.வி முன் சென்று உட்கார்ந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜெட்டிக்ஸ் அல்லது கார்ட்டூன் நெட்வொர்க் டி.வி தான் அவர்கள் உலகம். ஆனால் வள்ளி அக்காவின் உலகமே வேறு. வேடிக்கை பார்ப்பதும், அக்கம் பக்கத்தாருடன் பேசுவதும் எப்போதும் ஜன்னலின் வழியே தான், இல்லை ஜன்னலின் வழியே மட்டும் தான் என்று சொல்ல வேண்டும்.
வள்ளி அக்கா எங்கள் பக்கத்து வீட்டிற்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இதுவரை அவள் வெளியே சென்றது என்று நினைவில் இருப்பவை வெகு சில நாட்கள் மட்டுமே. கோடை விடுமுறையின் போது குழந்தைகளை சென்னையில் உள்ள ராஜு மாமாவின் தங்கை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும், குழந்தைகளின் பிறந்த நாளில் கோவிலுக்கு செல்லும் போதும் தான் வள்ளி அக்கா வெளியே வருவாள். கோவில் உற்சவங்களின் போது சாமி தரிசனம் செய்ய மற்ற எல்லோரும் வெளியே வந்தால் கூட வள்ளி அக்கா மட்டும் ஜன்னலின் வழியே சேவித்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வாள்.
எங்கள் வீட்டின் ஜன்னலுக்கும் வள்ளி அக்கா வீட்டின் ஜன்னலுக்கும் இடையே வெறும் மூன்றடி இடைவெளி தான். என் அண்ணி அடிக்கடி கேட்கும் "ஏன்க்கா இப்படி வீட்டுக்குள்ளயே இருக்குற?" என்ற கேள்விக்கு வள்ளி அக்கா எப்போதும் சொல்லும் பதில் இதுதான் - ஜன்னலின் வழியே தான் உலகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. எனக்கும் உலகத்தை அப்படி பார்ப்பது தான் பிடித்திருக்கிறது என்பாள். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிற்கே இதுவரை பத்து முறைக்கு மேல் வந்திருக்க மாட்டாள். நவராத்திரி கொலுவின் போது கடைசி நாள் மட்டும் வள்ளி அக்கா தவறாமல் வருவாள்.
வெளியே செல்வது அரிதே என்றாலும் வள்ளி அக்கா ஆடைகள் உடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவாள். ஜன்னலின் வழியே என் அண்ணியிடம் எப்படி இருக்குது என்று குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டாள். வள்ளி அக்கா விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதில் ரொம்ப அக்கறை காட்டுவாள். அவள் சமைப்பதில் கொஞ்சம், வாரத்தில் இரண்டு முறையாவது எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும் - ஜன்னலின் வழியே தான். அதற்கென ஒரு நீண்ட இரும்பு கம்பியும் சிறிய தூக்கும் வைத்திருப்பாள்.
ஒரு முறை வள்ளி அக்காவிடம் ஜன்னலின் வழியே பேசிக் கொண்டிருந்த போது சொன்னாள் - உனக்கொன்னு தெரியுமா சீனு? வெளிச்சம் குறைவான இடத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தின் காட்சிகள் தெளிவாய் தெரியும். நீ வேணும்னா அடுத்த முறை பார்க்கும் போது கவனி என்றாள். இந்த மாதிரி ஒரு விஷயத்தை இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது. வள்ளி அக்கா அதிகம் படித்தவளில்லை. எப்படி அவளுக்கு இதெல்லாம் யோசிக்க தோன்றுகிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது.
ஒரு முறை மின்தடையின் போது விளக்கேற்ற மனமின்றி ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தேன். வள்ளி அக்கா வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாள். குமாரும் ராணியும் மெழுகின் வெளிச்சத்தில் கைகளை மடக்கி நிழல் உருக்களை உருவாக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கிருந்து பார்க்கையில் வள்ளி அக்கா சொன்னது உண்மை தான் என்று தோன்றியது. ஜன்னலின் வழியே நடக்கும் நிகழ்வுகளை பற்றி வள்ளி அக்கா வேறு என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. எல்லோருக்கும் சிறு வயதில், பயணங்களின் போது ஜன்னல் சீட் வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். வள்ளி அக்காவிற்கு அந்த ஆசை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது போலும் என்று தோன்றியது.
ஒரு முறை ரயிலில் இருந்து இறங்கும் போது என் வலது கால் பிசகி விட்டது. ஐந்து நாட்கள் வீட்டில் இருக்கும் படி நேர்ந்தது. ஒரு நாள் ஜன்னலின் வழியே வள்ளி அக்கா, அண்ணி, நான் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். வள்ளி அக்கா மிகுந்த ஆவலோடு இருட்டிக் கொண்டு வந்த கருமேகத்தை பார்த்தபடி இருந்தாள். மழை வரும் போல் தெரிகிறது-என்றேன் நான். ஆமாம் சீனு! மழை பெய்யத்தான் போறது பாரேன். ஆனா நாம தான் ஜன்னல் வழியா வெயில வீட்டுக்குள்ள விடுற மாதிரி மழையை அனுமதிக்கிறதில்லை என்றாள். எத்தனை உண்மை அது. ஜன்னலின் வழியே வெயில் நம் வீடுகளுக்குள் ஊர்ந்து போவதை போல் மழையின் சாரலை விழ விடுவதில்லை. வள்ளி அக்கா அன்று மழையின் போது ஜன்னல்களை மூடாமல் சாரலில் நனைந்தபடி இருந்தாள். ஜன்னல் வழி உலகம் அவளுக்கு பிடித்திருந்ததை போல வேறு யாருக்காவது பிடித்திருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு நாள் அண்ணியிடம், ராஜு மாமாவிற்கு பொன்மலைக்கு மாற்றலாகி இருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களில் வீட்டையும் காலி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி அக்கா. பசங்களுக்கும் விஜய தசமியில் ஸ்கூல் சேர்த்து விட முடியும் என்றும் கூறினாள். அங்கே பார்த்து இருக்கும் வீட்டில் ஜன்னல் கம்பிகள் இங்கிருப்பது போல் அழகாய் இல்லை என்றும் சொன்னாள். உங்களை எல்லாம் அடிக்கடி நினைச்சுக்குவேன். என்னை மறந்துடாதீங்க என்று கண்களில் நீரை வைத்துக் கொண்டாள். அவள் கிளம்பிய அன்று நவராத்திரியின் ஏழாவது நாள். போகும் போது கூட ஒரு மணி நேரம் ஜன்னல் அருகே நின்று கண்ணீர் சிந்தி இருக்கிறாள். இந்த முறை அவள் நவராத்திரி கடைசி நாள் எங்கள் வீட்டுக்கு வர முடியாது. அவளுடைய வீட்டு ஜன்னல் மூடிக்கிடந்தது.
வள்ளி அக்கா வீடு மாறிப்போய் இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஜன்னலுக்கும் வள்ளி அக்கவிற்குமான உறவு வார்த்தைகளில் சொல்ல முடியாதது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். வள்ளி அக்கா சொன்னது போல் ஜன்னலின் வழியே உலகம் அழகாய்த்தான் இருக்கிறது. அவள் போன பின் மூடிய ஜன்னல்கள் திறக்கப்படுவதே இல்லை. புதிதாய் குடி வந்தவர்களின் உலகம் எப்போதும் இந்த மூடப்பட்ட ஜன்னல்களுக்கு பின்னால் தான். எப்போது ஜன்னலை பார்த்தாலும் வள்ளி அக்காவின் நினைவு வந்து போவதை தடுக்க முடிவதில்லை. காற்றில் துகள்கள் பறந்த படி இருந்தன. வெளிச்சம் எங்கள் வீட்டுக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது - ஜன்னலின் வழியே...
Friday, November 20, 2009
Friday, November 13, 2009
காத்திருப்பின் ஒரு துளி
வேதரத்தினம் பிள்ளை பூங்கா - நாங்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளும் இந்த பூங்கா ஊருக்கு சற்றே ஒதுக்குபுறமாகத் தான் இருக்கிறது. வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் பின் என்ன வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் இடங்களிலா சந்தித்துக் கொள்ள முடியும்? தாம்பரம் தாண்டி மாடம்பாக்கம் போகிற வழியில் இருக்கிறது.
பூங்காவில் என்னையும், வயதான ஒருவரையும் தவிர வேறு யாருமில்லை. குருவிகளையோ, அணிலையோ, பட்டாம்பூச்சியையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. அந்த வயதானவரும் அசதியில் இருப்பதாகத்தான் பட்டது.
நான் வந்து ஒரு மணி நேரமாகியாச்சு. அவள் இன்னும் வரவில்லை. ஃபோன் செய்தாலும் ரிங் போய்க்கிட்டே இருக்கு.மனம் நிலை கொள்ளாமல், அவள் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்ற கேள்விக்கு ஆயிரமாயி்ரம் பதில்களில் சமாதானம் அடையாமல் தவித்துக் கொண்டிருந்தது.
வயதானவர் என்னருகில் வந்து நிற்பது போன்று இருந்தது. தலையை சொறிந்த படி நின்று கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றேன். இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவளால பண்ண ஆரம்பிச்சது தான்.
தாம்பரம் வித்யா தியேட்டரில் 'பசங்க' படம் வந்திருந்த சமயம். நாங்கள் இருவரும் சென்று இருந்தோம்.அதன் பிறகு ஒரு முறை மாடம்பாக்கம் கோவிலுக்கு சென்றோம். பேருந்துக்காக நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தோம். பாட்டி ஒருவர் வந்து நின்றார். திடீரென என் சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றாள். அன்று முதல் இன்று வரை அவளின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நல்ல விஷயம் தானே.
பூவரச மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்து கண்கள் மூடி படுத்துக்கொண்டேன். கடிகாரத்தின் டிக்-டிக் சத்தமும், இதயத்தின் லப்-டப் சத்தமும் ஒரு சேர காத்திருப்பின் அசுர நொடிகளை கடந்து கொண்டிருந்தது.
முன் பனியா..முதல் மழையா..
என் மனதில் ஏதோ விழுகிறதே..
விழுகிறதே..நனைகிறதே..ஓ..ஓ..ஓ..
புரியாத உறவில் நின்றேன்..அறியாத சு..
மறுமுனையில் இருந்து அவள் தான் பேசினாள். ஹலோ..இன்னும் ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும் டா. செல்லம், ஸாரி டா, ப்ளீஸ் டா வெயிட் பண்ணு. சரியா ரொம்ப போர் அடிச்சா ஆப்போசிட் ஆவின் பூத்ல போய் ஒரு பால் சாப்பிடு.ஒகேவா?
நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.
என்னடா கோபமா? எதுவுமே பேச மாட்டேங்குற? - இது அவள்.
நான் கோவிச்சுக்கலைனா அவளுக்கு பிடிக்காது. நான் கோவிக்காதது மாதிரி அவ நடந்துக்கிட்டா எனக்கு பிடிக்காது.
பின்ன என்ன? எவ்வளவு நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?
மெட்ராஸ்ல எல்லா இடத்துலயும் இருக்குற கொசு கூட இந்த பார்க்ல இல்லை, என்னைத் தவி்ர.
அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்-அது வந்து என்னென்னா? இந்த ராஜா இருக்கான்ல..அவனோ..
அவளை இடைமறித்து - இங்க பார். எனக்கு செம கடுப்பா இருக்கு. எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுதா? நீ என்ன ரீசன் சொன்னாலும் சரி நான் கேட்க போறதில்ல சரியா.அடுத்த டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலை அப்புறம் அவ்ளோ தான். ஃபோனை கட் செய்தேன்
ஹலோ ட்யூன்ஸ்ல கூட சுகங்கிற வார்த்தைய கேட்க விடமாட்டேஙகுறாளே. வரட்டும் இன்னிக்கு என்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். காதலின் இலக்கணம் மீறப் படாமலே ரெண்டு பேரும் எங்க லெவல மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்தோம்.
அவள் வருவாளா..அவள் வருவாளா..அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா..
ரொம்ப முக்கியம். வந்த கடுப்பை அடக்கிக் கொண்டு வேகமாக வந்து அந்த பாட்டு கேட்காதபடி பூங்கா பெஞ்சில் மறுபடி அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபாடை எடுத்து மாட்டிக் கொண்டு வழக்கம் போல இளையராஜாவின் மெலோடியில் நனைய தொடங்கினேன்.
ஆப்பிள் ஐபாடை போன பிறந்த நாளின் போது அவள் தான் பரிசளித்தாள்.அவளை சந்திக்க வரும் போதெல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த வாட்ச், அவளுக்கு பிடித்த கலர்ல காம்பினேஷன்ல டிரஸ், அவ வாங்கிக் கொடுத்த பொருட்கள் எல்லாம் இல்லைனா அவ்ளோ தான். ஏற்கனவே காதலிச்சவங்களுக்கு இந்த மாதிரி இத்தியாதிகள் எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.
அந்த பூங்காவின் வழியே செல்லும் பிகர்களை "அ..ஆ..இ..ஈ.." என்ற வரிசையில் வகைப்படுத்த தொடங்கினேன். எப்படியும் அவள் வந்ததும் கேட்பாள்-என்ன இன்னைக்கு எத்தனை பிகர்களை சைட் அடிச்சீங்க. நானும் ராமன் தான்னு சொல்லணும். நம்புறாலோ இல்லையோ அது வேற விஷயம்.
மனித வாழ்க்கையில் எவ்வளவு நேரம் காத்திருப்பில் கழிகிறது தெரியுமா என்று கவிஞன் எமர்சன் ஏற்கனவே கேட்டு வைத்தது நினைவிற்கு வந்து போனது. காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை என்று கொண்டாலும் காத்திருப்பின் இடைவெளிகளில் மனதின் ஒட்டங்கள் கவலையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பை கூட்டி விடுகின்றன.
காத்திருப்பு
காத்திருப்பின் இடைவெளிகளில் நொடிகள் கூட கணம்
காத்திருப்பின் முடிவுகளில் நினைவுகள் கூட கணம்
காதலில் காத்துக் கிடப்பதும் காக்க வைப்பதும் எப்போதுமே சுகம்.
அட, நமக்குக் கூட கதை, கவிதை மாதிரி எதோ வருது பாரேன். ஐபாடை அணைத்து வைத்தேன். அடச்சே..என்ன இப்படி சம்பந்தமே இல்லாம எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கோம் என்று தோன்றியது.
என்னென்னோவோ யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் எனக்கு பின்னால் நின்று கொண்டு எனக்கு டயல் செய்தாள். என் செல்ஃபோன் பாடத் துவங்கியது.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு...கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே...
கோபம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, மெதுவாக திரும்பி அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். எனக்கு டைம் அவுட் என்பது மட்டும் அவள் பார்வையில் இருந்து புரிந்தது.

****************************************************************************
செல்ஃபோனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தேன். எஸ்.பி.பியின் குரலில் ஹலோ ட்யூன்ஸ் கேட்கத் தொடங்கியது.முன் பனியா..முதல் மழையா..
என் மனதில் ஏதோ விழுகிறதே..
விழுகிறதே..நனைகிறதே..ஓ..ஓ..ஓ..
புரியாத உறவில் நின்றேன்..அறியாத சு..
மறுமுனையில் இருந்து அவள் தான் பேசினாள். ஹலோ..இன்னும் ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும் டா. செல்லம், ஸாரி டா, ப்ளீஸ் டா வெயிட் பண்ணு. சரியா ரொம்ப போர் அடிச்சா ஆப்போசிட் ஆவின் பூத்ல போய் ஒரு பால் சாப்பிடு.ஒகேவா?
நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.
என்னடா கோபமா? எதுவுமே பேச மாட்டேங்குற? - இது அவள்.
நான் கோவிச்சுக்கலைனா அவளுக்கு பிடிக்காது. நான் கோவிக்காதது மாதிரி அவ நடந்துக்கிட்டா எனக்கு பிடிக்காது.
பின்ன என்ன? எவ்வளவு நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?
மெட்ராஸ்ல எல்லா இடத்துலயும் இருக்குற கொசு கூட இந்த பார்க்ல இல்லை, என்னைத் தவி்ர.
அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்-அது வந்து என்னென்னா? இந்த ராஜா இருக்கான்ல..அவனோ..
அவளை இடைமறித்து - இங்க பார். எனக்கு செம கடுப்பா இருக்கு. எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுதா? நீ என்ன ரீசன் சொன்னாலும் சரி நான் கேட்க போறதில்ல சரியா.அடுத்த டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலை அப்புறம் அவ்ளோ தான். ஃபோனை கட் செய்தேன்
ஹலோ ட்யூன்ஸ்ல கூட சுகங்கிற வார்த்தைய கேட்க விடமாட்டேஙகுறாளே. வரட்டும் இன்னிக்கு என்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். காதலின் இலக்கணம் மீறப் படாமலே ரெண்டு பேரும் எங்க லெவல மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்தோம்.
****************************************************************************
இன்னும் பத்து நிமிடங்கள் ஓட்ட வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் சொன்னது போல் ஆவின் பூத் நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு பால் சொல்லி வாங்கிக் கொண்டு காசுக்காக பர்சை எடுக்கையில், எப்.எம்-மில் யாருடைய காதல் கதையையோ உம் கொட்டி கேட்டுக் கொண்டிருந்த லேடி சொன்னாள் - கடைசியா நம்மகிட்டே; பேசின நேயருக்காகவும்; உங்க எல்லோருக்காகவும்; நம்ம சின்ன மார்கண்டேயன்; சூர்யா நடித்த; நேருக்கு நேர் படத்தில் இருந்து;வரப்போற பாடலை கேளுங்க; கேட்டு ரசிங்க; தொடர்ந்து கால் பண்ணி பேசுங்க; அண்ட் இது உங்களின் காதல் கதை நேரம்... அவள் வருவாளா..அவள் வருவாளா..அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா..
ரொம்ப முக்கியம். வந்த கடுப்பை அடக்கிக் கொண்டு வேகமாக வந்து அந்த பாட்டு கேட்காதபடி பூங்கா பெஞ்சில் மறுபடி அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபாடை எடுத்து மாட்டிக் கொண்டு வழக்கம் போல இளையராஜாவின் மெலோடியில் நனைய தொடங்கினேன்.
ஆப்பிள் ஐபாடை போன பிறந்த நாளின் போது அவள் தான் பரிசளித்தாள்.அவளை சந்திக்க வரும் போதெல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த வாட்ச், அவளுக்கு பிடித்த கலர்ல காம்பினேஷன்ல டிரஸ், அவ வாங்கிக் கொடுத்த பொருட்கள் எல்லாம் இல்லைனா அவ்ளோ தான். ஏற்கனவே காதலிச்சவங்களுக்கு இந்த மாதிரி இத்தியாதிகள் எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.
அந்த பூங்காவின் வழியே செல்லும் பிகர்களை "அ..ஆ..இ..ஈ.." என்ற வரிசையில் வகைப்படுத்த தொடங்கினேன். எப்படியும் அவள் வந்ததும் கேட்பாள்-என்ன இன்னைக்கு எத்தனை பிகர்களை சைட் அடிச்சீங்க. நானும் ராமன் தான்னு சொல்லணும். நம்புறாலோ இல்லையோ அது வேற விஷயம்.
மனித வாழ்க்கையில் எவ்வளவு நேரம் காத்திருப்பில் கழிகிறது தெரியுமா என்று கவிஞன் எமர்சன் ஏற்கனவே கேட்டு வைத்தது நினைவிற்கு வந்து போனது. காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை என்று கொண்டாலும் காத்திருப்பின் இடைவெளிகளில் மனதின் ஒட்டங்கள் கவலையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பை கூட்டி விடுகின்றன.
காத்திருப்பு
காத்திருப்பின் இடைவெளிகளில் நொடிகள் கூட கணம்
காத்திருப்பின் முடிவுகளில் நினைவுகள் கூட கணம்
காதலில் காத்துக் கிடப்பதும் காக்க வைப்பதும் எப்போதுமே சுகம்.
அட, நமக்குக் கூட கதை, கவிதை மாதிரி எதோ வருது பாரேன். ஐபாடை அணைத்து வைத்தேன். அடச்சே..என்ன இப்படி சம்பந்தமே இல்லாம எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கோம் என்று தோன்றியது.
என்னென்னோவோ யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் எனக்கு பின்னால் நின்று கொண்டு எனக்கு டயல் செய்தாள். என் செல்ஃபோன் பாடத் துவங்கியது.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு...கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே...
கோபம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, மெதுவாக திரும்பி அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். எனக்கு டைம் அவுட் என்பது மட்டும் அவள் பார்வையில் இருந்து புரிந்தது.
Wednesday, November 04, 2009
ஊரணி கரையோரம்
நீரு வத்திப் போய் பாலம் பாலமா வெடிச்சுக் கிடக்குது கரிசல்குளம் ஊரணி. ஊரணில தண்ணி நிக்குறத பார்த்தே பல வருசம் ஆச்சு. ஊர் பொங்கலின் முளைப்பாரி போது கூட வண்டியில தண்ணி கொண்டு வந்து விடுற நிலைதான் இன்னமும் நடக்குது என்று பெருமூச்சுடன் முத்தையா தனக்குள் நினைத்துக் கொண்டு இருந்தான்.
ஊரணிக்கு மேக்கால* இருக்குற கரையில தீக்குச்சிய வருசயா* அடுக்குன கணக்கா புளியமரங்க வருசயா நிக்கும். கீழக்கரையில* ஆலமரங்க நாலு பெருசா விழுது போட்டு கிளை பரப்பி நிக்கும். கடைசி ஆலமரத்த ஒட்டினாப்புல ஊருக்கு போற வண்டிப்பாதையும் எதிரே பேச்சியம்மாக் கோவிலும் இருக்கும். கீழக்கரையில ஊரு காவல் தெய்வம் அய்யனார் கோவிலும், கண்மாய்ல இருந்து மண் அடிக்குற வண்டிங்க போற பாதையும, கண்மாய் மதகை துறந்துவிட்டா தண்ணி வரதுக்கு கால்வாயும் இருக்கும். சின்னப் பிள்ளைங்க கண்மாய்க்கு போறதுன்னா ஓடியாந்துருங்க. வழி முழுக்க இலந்தை மரமும், கள்ளிச் செடியும் நெறய கிடக்கும்.
ஏய் புள்ள ராமாயி! அங்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறவ? ஆடுங்கள எங்க காட்டுல மேய்க்க சொல்லி தான் உங்கப்பாரு சொன்னாராக்கும். புளியமரத்துக்கு கீழ உட்கார்ந்து இருந்தமேனிக்கு குரல் கொடுத்தான் முத்தையா.
மாமோய், உங்க காட்டுல எங்க வீட்டு வெஞ்சனத்துக்கே* வெள்ளாமையக் காணோம். இதுல எங்க வெள்ளாடுங்க திண்ணு தான் குறைஞ்சிற போகுதாக்கும் என்று ஆட்டுக்கு குலை ஒடிக்க துரட்டியுடன் நின்று இருந்த ராமாயி பதிலுக்கு கத்தினாள்.
மாமன்கிற மட்டு மருவாத* தெரியுதா இந்த கழுதைக்கு என்று முனகியபடி பேச்சியம்மன் கோவிலுக்கு நடந்தான் முத்தையா. ராமாயி மஞ்சனத்தி மரத்திலேறி ஆட்டுக்கு குலை ஒடித்துக் கொண்டே மாமன் போற திசைய பார்த்தபடி இருந்தாள்.
பேச்சியம்மன் கோவில் முன்னால ஆலமர விழுதுகள்ல ஊருல இருக்குற பொடிசுக ஊஞ்சலாட வந்துரும் எப்பவும். வெயிலா மழையானு கூட பாக்காதுங்க. கயித்து முனையில ஒரு பெரிய டயரை கட்டி ஒன்னு உட்காந்துக்க பின்னால இருந்து இன்னொன்னு தள்ளி விடும். எட்டு வயசு லட்சுமி - முத்தையாவோட அக்கா புள்ள - அங்குன தான் விளையாடிக்கிட்டு இருந்துச்சு. லட்சுமியை கூப்பிட்டு ராமாயியிடம் ஒத்த காயிதத்தை* கொடுத்துவர சொல்லிட்டு இடுப்பு வேட்டி மடிப்புல இருந்து ஒரு தேன்மிட்டாய எடுத்து அவ கையில திணிச்சான் முத்தையா.
காயிதத்துல ஊரணி ஒரமா இருக்குற மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக வரைஞ்சிருந்தான் முத்தையா. லட்சுமி ராமாயியிடம் அந்த காயிதத்தை கொடுக்க பூத்துக் கிடக்குற பருத்தி செடிகள தள்ளிக்கிட்டு போனா.
லட்சுமி வருவதை பார்த்த ராமாயி - "வாடி என் சின்ன சக்காளத்தி, என்ன கொடுத்துவுட்டாரு உன் புருஷன்னு" வம்புக்கு இழுத்தா.
என்னையா வையிற*...இரு...இரு...உன்னய எங்க ஐயப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன். முத்தன் (முத்தையா என்று முழுசா சொல்ல வராது லட்சுமிக்கு) மாமா இத்த உன்கிட்ட கொடுத்தாற சொல்லுச்சுனு கொடுத்துட்டு ரெண்டு பருத்திப்பிஞ்ச பிடுங்கி திண்ணுக்கிட்டே போனா லட்சுமி.
ராமாயி காயிதத்த பிரிச்சு பார்த்தா. மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக - அட இது என்ன ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குது. ராமாயிகிட்ட யாரும் இதுவர கதை* போட்டு செயிச்சது கிடையாது. மாமன் வரைஞ்ச கதை ராமாயிக்கு புரிய ஆரம்பிச்சுது - ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குறது எப்படி நடக்காதோ அப்படி தான் வேற சாதியில பொறந்த நம்ம கல்யாணமும்னு முத்தையா மாமன் சொல்லாம சொல்லியிருக்குதுனு.
பொல பொலனு கண்ணுல வடியிற கண்ணீரோட ராமாயி சொன்னா.
என் மாமனுக்கு நெஞ்சுல ஈரம் மிச்சம்
எனக்காவது கண்ணுல ஈரம் மிச்சம்
ஈரம் இல்லாம போச்சே ஊரணிலயும்
ஊருல சாதிப்பேர சொல்லி அலையறவங்க மனசுலயும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேக்கால* - மேற்கில்; வருசயா* - வரிசையா; கீழக்கரை* - கிழக்கில் இருக்கும் கரை; வெஞ்சனம்* - சாதத்துடன் தொட்டுக் கொள்ள செய்யப்படும் காய்கறி; மருவாத* - மரியாதை; காயிதம்* - காகிதம்; வையுதல்* - திட்டுதல்; கதை* - விடுகதை

Subscribe to:
Posts (Atom)